style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைதலைவர் தனியரசு, சர்க்கார் ஆடியோ விழாவில் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில்,
நடிகர் விஜயினால் ஒரு வார்டு உறுப்பினராகக் கூட ஆக முடியாது. ஏற்கனவே முதல்வர் கனவில் அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தும், கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் கமலும் தற்போதுமக்கள் செல்வாக்கை இழந்து நிற்கிறார்கள்.யாரோ எழுதிக்கொடுத்த வசனங்கள், கவிதைகளை பேசியவர்களெல்லாம் முதல்வராக ஆசைப்படுவதா? இப்படி முதல்வர் பதவிக்கும் ஆசைப்படுபவர்கள் தமிழகத்திற்கு என்ன தியாகம் செய்தார்கள் என சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார்.