Advertisment

விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சி; சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

actor Vijay Birthday party incident at Neelangarai near Chennai

Advertisment

சென்னையை அடுத்துள்ள நீலாங்கரையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் பிறந்தநாள் விழா இன்று (22.06.2024) நடைபெற்றது. இந்த விழாவானது அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையொட்டி இந்த விழாவில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தத்திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி சிறுவன் ஒருவனின் கையில் தீ பற்றவைக்கப்பட்டு தீ எரிந்தபடி அந்த சிறுவன் கையால் ஓடு உடைக்கும் சாகச நிகழ்வு நடத்தப்பட்டது. இதற்காக மேடையில் ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதே சமயம் சிறுவனின் கையில் தீ பற்றவைக்கப்பட்டு, சிறுவன் ஓடுகளை உடைத்த போது, கையில் பற்றி எரிந்த தீ அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருந்தது. இதில், சிறுவன் வலியால் துடிப்பதைக் கண்டு அருகில் இருந்த நபர் தண்ணீர் என நினைத்து பெட்ரோல் கேனை எடுத்து சிறுவன் கையில் ஊற்றியாதக் கூறப்படுகிறது.

இதனால் மேலும் கைகளில் தீ பற்றி எரிந்தது. இதனைக்கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு தீயை அணைத்து, சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் சிறுவனின் கையில் பற்றிய தீயை அணைக்க முயன்றவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் இவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

birthday child tvk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe