நடிகர் வெங்கட் சுபா கரோனாவால் காலமானார்!

actor venkat subha passed away today in chennai hospital

நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கரோனா பாதிப்பால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று (29/05/2021) காலமானார். அவருக்கு வயது 60.

இவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். நடிகர் வெங்கட் சுபா, 'டூரிங் டாக்கீஸ்' யூடியூப் சேனலில் படங்களை விமர்சனம் செய்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்த இவர், 'மொழி', 'கண்டநாள் முதல்', 'அழகிய தீயே' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

திரைத்துறையினர் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது திரைத்துறையினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

actor passed away venkat subha
இதையும் படியுங்கள்
Subscribe