Advertisment

நடிகர் தவசிக்கு இலவசமாக புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ.

Advertisment

நடிகர் தவசி உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். உணவுக்குழாயில் (Oesophageal stent) பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பா.சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் அவருக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.‘

இதுகுறித்து டாக்டர் சரவணன் கூறியதாவது, தவசி 11.11.2020 அன்று உணவுக்குழாய் புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில் எங்களது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். உணவுக்குழாயில் (Oesophageal stent) பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

Advertisment

140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் எங்களது கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன் "கண்ணே கலைமானே" திரைப்படத்திலும் நடித்துள்ளார். அந்த படப்பிடிப்பு தளத்தில் தான் எனக்கு இவர் அறிமுகமானார்.

இவருக்கு யாரேனும் உதவ நினைத்தால் அவரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினால் வறுமையில் இருக்கும் அவரின் குடும்பத்தார்க்கு பேருதவியாக இருக்கும் என்றார் டாக்டர் சரவணன்.

actor DMK MLA help saravanan
இதையும் படியுங்கள்
Subscribe