நடிகர் சூர்யாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி ஆதரவு!

நடிகர் சூர்யாவின் 'புதிய கல்விக்கொள்கை' குறித்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் புதிய கல்விக்கொள்கை ஏழை, எளிய மாணவர்களின் கண்களில் மண்ணை வீசுகிறது. அதே போல் நடிகர் சூர்யா போன்ற இளைஞர்களே நலிந்து வரும் தமிழ் சமூகத்தை தோள் கொடுத்து உயர்த்துவார்கள். நடிகர் சூர்யாவின் மனிதாபிமான பண்பை எண்ணி வியந்தேன், திகைத்தேன்.

actor surya said new education policy statement support in mdmk party vaiko mp

நாட்டின் எதிர்காலத்துக்கே ஆபத்தான கூடாரத்திலிருந்து அதற்கு எதிர்ப்பு ஓங்காரக் குரல் எழுந்தது.சமூக நீதியிலும், மாநில சுயாட்சியிலும் மாறாத பற்று கொண்டவர்கள் நடிகர் சூர்யாவை ஆதரித்து குரல் தந்த போது நான் மகிழ்ந்தேன் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது நன்மையாக முடிந்தது. “இன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்” என்ற வாசகம் தான் சூர்யா பிரச்சனையில் நடந்துள்ளது என்றார்.

actor surya mdmk NEW EDUCATION POLICY related statements
இதையும் படியுங்கள்
Subscribe