Actor Surya donates Rs 1 crore for student education purpose

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (01/11/2021) நேரில் சந்தித்த நடிகர் சூர்யா - ஜோதிகா, பழங்குடி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக 2டி நிறுவனம் சார்பில் ரூபாய் 1 கோடி நிதியை முதலமைச்சரிடம் வழங்கினர். இந்த நிகழ்வின்போது, முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisment

நாளை வெளியாகவுள்ள நடிகர் சூர்யாவின் 'ஜெய் பீம்' திரைப்படத்தில் பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் பேசப்பட்டிருக்கும் நிலையில், அம்மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.