ADVERTISEMENT

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பில் கரோனா நிவராண உதவிகள்

04:57 PM May 03, 2020 | rajavel



ADVERTISEMENT

கரோனா நோய் தொற்று காரணமாக அரசு பிறப்பித்த ஊரடங்கினால், கடந்த ஒரு மாதத்திற்க்கு மேலாக வேலை மற்றும் வருமானம் இன்றி அன்றாட வாழ்வை பெரும் சிரமத்துடன் நகர்த்தி வருகிறார்கள் பழங்குடி இருளர் இனமக்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பின் மூலம் திண்டிவனம் வட்டத்தில் திமுக பிரமுகர் பிகேடி ரமேஷ் மற்றும் ஸ்டெப்ஸ் அறக்கட்டளை பங்குத்தந்தை பெலிப்ஸ் ஆல்பர்ட் செஞ்சுலிவை சங்கம் ஆகியவற்றின் மூலம் 613 பழங்குடி இருளர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

தலா பத்து கிலோ அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட்டன. அதொடு 105 தன்னார்வளர்கள் 7 லட்சத்து 96 ஆயிரத்து 160 ரூபாய் பழங்குடி இருளர் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்க்கு நன்கொடையாக வழங்கினார்கள். அதன் மூலம் திண்டிவனம் வானூர் செஞ்சி மேல்மலையனூர் விக்கிரவாண்டி விழுப்புரம் கண்டாச்சிபுரம் ஆகிய வட்டங்களில் வாழும் 140 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரன உதவிகள் வழங்கப்பட்டது. அதேபோன்று மேல்மலையனூர், உளுந்துர்பேட்டை, கடலூர், பண்ருட்டி ஆகிய நகரங்களில் வசிக்கும் 1750 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளது.

இந்த சூழ்நிலையில் பழங்குடி இருளர் மாணவர்களின் உயிர்கல்வி கற்க்கவும் அவர் குடும்ப நிலையை மேம்படுத்தவும் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது திரைப்பட நடிகர் சூர்யாவின் அகரம் கல்வி அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை மூலம் கரோனா நிவாரண நிதியாக பழங்குடி இருளர் மக்களுக்காக 4 லட்சத்து 34 ஆயிரத்து 330 ரூபாய் வழங்கியுள்ளனர்.

அதெபோன்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு அவர்கள் 1 லட்சம் ரூபாய், புனித அன்னால் சபை மற்றும் கவசம் கிளாரட்சபை, இரண்டும் சேர்ந்து 3 லட்சம் ரூபாய் இத்துடன் சென்னையிலுள்ள ஓய்வுபெற்ற பேராசிரியர் சற்க்குனஸ்டீபன் மற்றும் அவரது நன்பர்களும் இணைந்து 50000, திண்டிவனம் தமிழ்தாய் பள்ளி ஆசிரியர் பணியாளர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.

இந்த உதவித்தொகைகள் அனைத்தும் விழுப்புரம் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடி இருளர் இனமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உதவி செய்த திரைப்பட நடிகர் சூர்யாவின் அகரம் கல்வி அறக்கட்டளை மற்றும் அணைத்து நண்பர்களுக்கும் இருளர் பாதுகாப்பு சங்கம் மற்றும் பழங்குடி இருளர் அறக்கட்டளை நன்றிகளை தெரிவித்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT