Skip to main content

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பில் கரோனா நிவராண உதவிகள்

Published on 03/05/2020 | Edited on 03/05/2020



 

கரோனா நோய் தொற்று காரணமாக அரசு பிறப்பித்த ஊரடங்கினால், கடந்த ஒரு மாதத்திற்க்கு மேலாக வேலை மற்றும் வருமானம் இன்றி அன்றாட வாழ்வை பெரும் சிரமத்துடன் நகர்த்தி வருகிறார்கள் பழங்குடி இருளர் இனமக்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பின் மூலம் திண்டிவனம் வட்டத்தில் திமுக பிரமுகர் பிகேடி ரமேஷ் மற்றும் ஸ்டெப்ஸ் அறக்கட்டளை பங்குத்தந்தை பெலிப்ஸ் ஆல்பர்ட் செஞ்சுலிவை சங்கம் ஆகியவற்றின் மூலம் 613 பழங்குடி இருளர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. 

 

 

தலா பத்து கிலோ அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட்டன. அதொடு 105 தன்னார்வளர்கள் 7 லட்சத்து 96 ஆயிரத்து 160 ரூபாய் பழங்குடி இருளர் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்க்கு நன்கொடையாக வழங்கினார்கள். அதன் மூலம் திண்டிவனம் வானூர் செஞ்சி மேல்மலையனூர் விக்கிரவாண்டி விழுப்புரம் கண்டாச்சிபுரம் ஆகிய வட்டங்களில் வாழும் 140 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரன உதவிகள் வழங்கப்பட்டது. அதேபோன்று மேல்மலையனூர், உளுந்துர்பேட்டை, கடலூர், பண்ருட்டி ஆகிய நகரங்களில் வசிக்கும் 1750 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளது. 

இந்த சூழ்நிலையில் பழங்குடி இருளர் மாணவர்களின் உயிர்கல்வி கற்க்கவும் அவர் குடும்ப நிலையை மேம்படுத்தவும் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது திரைப்பட நடிகர் சூர்யாவின் அகரம் கல்வி அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை மூலம் கரோனா நிவாரண நிதியாக பழங்குடி இருளர் மக்களுக்காக 4 லட்சத்து 34 ஆயிரத்து 330 ரூபாய் வழங்கியுள்ளனர். 
 

அதெபோன்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு அவர்கள் 1 லட்சம் ரூபாய், புனித அன்னால் சபை மற்றும் கவசம் கிளாரட்சபை, இரண்டும் சேர்ந்து 3 லட்சம் ரூபாய் இத்துடன் சென்னையிலுள்ள ஓய்வுபெற்ற பேராசிரியர் சற்க்குனஸ்டீபன் மற்றும் அவரது நன்பர்களும் இணைந்து 50000, திண்டிவனம் தமிழ்தாய் பள்ளி ஆசிரியர் பணியாளர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். 
 

இந்த உதவித்தொகைகள் அனைத்தும் விழுப்புரம் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடி இருளர் இனமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உதவி செய்த திரைப்பட நடிகர் சூர்யாவின் அகரம் கல்வி அறக்கட்டளை மற்றும் அணைத்து நண்பர்களுக்கும் இருளர் பாதுகாப்பு சங்கம் மற்றும் பழங்குடி இருளர் அறக்கட்டளை நன்றிகளை தெரிவித்தது.     

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அசைவம் ஊட்டி விடுவாரு” - கண்ணீர் மல்க சூர்யா அஞ்சலி!

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Surya tribute to Vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பில் இருந்த நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராகத் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். 

சூர்யா பேசியதாவது, “அண்ணனோட இந்த பிரிவு ரொம்ப துயரமானது. மனசு அவ்ளோ கஷ்டமாயிருக்கு. ஆரம்ப காலத்தில் நான் நடித்த படங்கள் எனக்கு பெரிய பாராட்டை பெற்றுத் தரவில்லை. பெரியண்ணா படம் அவரோட சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைச்சது. ஒவ்வொரு நாளும் சகோதர அன்போடு இருப்பாரு, அப்பாவிற்காக வேண்டிக்கொண்டு நான் அசைவம் சாப்பிடுவதில்லை, அப்ப அவர் ஒரு வார்த்தையை உரிமையா சொல்லி ஏன் சைவம் சாப்பிடுறேன்னு திட்டி அவருடைய தட்டிலிருந்து எடுத்து சாப்ட வச்சாரு, நடிக்கிறவனுக்கு உடம்பில் சத்து வேண்டும்னு ஊட்டிவிடுவாரு”

“அவரோட நடிச்ச நாட்களில் பிரமிச்சு பார்த்தேன். அவரை இலகுவாக அனைவரும் அணுகலாம். கலைநிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றபோது அவருடைய உழைப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அவர் மாதிரி யாரும் கிடையாது. இறுதி அஞ்சலியில் அவர் முகம் பார்க்க முடியாதது என்பது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சிக்காரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். விஜயகாந்த் இறந்தபோதே சூர்யா வீடியோ வெளியிட்டு தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.