5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து... நடிகர் சூர்யா வரவேற்பு!

எதிர்ப்பு வலுத்து வந்ததால் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது அரசு. இது குறித்து பள்ளிகல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

 actor Suriya welcomes Class 5,8th public exam cancel

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வரவேற்புகள் தெரிவிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், நடிகர் சூர்யா5,8 ஆம்வகுப்புகளுக்குபொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து ட்விட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார்.

அந்த பதிவில், படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வி ஓட்டத்தில் இணைப்பதுஎத்தனை கடினம் என்பது அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது. 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.கல்வி அமைச்சருக்கும்,தமிழக அரசுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

education Surya twitter
இதையும் படியுங்கள்
Subscribe