'நீட்' எனும் மனுநீதி தேர்வு மாணவர்களை பலியிடும் ஆயுதம்... - நடிகர் சூர்யா காட்டம்

actor suriya about neet exam

நீட் தேர்வு பயத்தில்3 பேர் தமிழகத்தில் உயிரிழந்த நிலையில் நடிகர் சூர்யா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்து இருக்கிறார்கள். அப்பாவி மாணவர்களின்மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. சாதாரண குடும்ப பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கும் நீட் தேர்வுக்குஎதிராக குரல் எழுப்புவோம்.

நீட்தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வு எழுதபோகும் மாணவர்களுக்கு வாழ்த்து கூறுவதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதை போல் அவலம்எதுவுமில்லை. கரோனா காலத்தில்கூட மாணவர்கள் தேர்வு எழுதிதான்தகுதியைநிரூபிக்க நிர்பந்திக்கப்படுவதுதான் வேதனை.நீட் போன்ற மனுநீதிதேர்வுகள்மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது” என்று கூறியுள்ளார்.

neet exam suriya
இதையும் படியுங்கள்
Subscribe