ஆடி கார் பதிவில் வரிஏய்ப்பு செய்த பாஜக எம்.பி. சுரேஷ்கோபி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி டோமின் தச்சங்கிரி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

Actor sureshgopi- Tax evasion issue

கேரளாவின் பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி எம்.பி., நடிகர்பகத்பாசில், நடிகை அமலாபால் ஆகியோர் மீது ஆடி கார்களை பதிவு செய்த விவகாரத்தில் வரிஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisment

இதில் அமலாபால், பகத்பாசில் கூடுதல் வரி செலுத்தியதால் இந்த வழக்கில் இருந்து அவர்களை போலீசார் விடுவித்து விட்டனர். ஆனால் சுரேஷ்கோபி நோட்டிஸ் அனுப்பியும் கேரள அரசுக்கு வரியை கட்டாமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் அவர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்தரிக்கை தாக்கல் செய்ய குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி டோமின் தச்சங்கிரி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக அவருடை மத்திய மந்திரி கனவு கனவாகவே மாறுவதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Advertisment