Skip to main content

'சூரிதான் பணத்தை திரும்ப தர வேண்டும்'-நடிகர் விஷ்ணு விஷால்!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

 

actor soori vs actor vishnu vishal statement

 

 

நடிகர் சூரி புகாரின் பேரில் தந்தை ரமேஷ் குடவாலா மீது வழக்கு பதிவான நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில். “உண்மையில் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்க்கு சூரி தான் ஒரு அட்வான்ஸ் பணத்தை திரும்ப தர வேண்டும். ‘கவரிமான் பரம்பரை’ படத்துக்காக 2017- ஆம் ஆண்டு நடிகர் சூரிக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்கப்பட்டது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. என் மீதும், தந்தை மீதும் வைக்கப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது. சட்டம், நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது; சட்டம் அனுமதிக்கும் பாதையில் நாங்கள் செல்வோம். எல்லாம் தெளிவான பின் சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வெற்றியைக் கொண்டாடிய கருடன் படக்குழு (படங்கள்)

Published on 14/06/2024 | Edited on 14/06/2024

 

வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கருடன்’. இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அண்மையில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் கருடன்  பட சாக்ஸ் மீட் இன்று நடைபெற்றது. இதில் படத்தின் ஹீரோ சூரி, சசிகுமார், டைரக்டர்  துரை செந்தில்குமார், ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன்,  டைரக்டர்கள் வெற்றிமாறன், ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் கே.குமார், ஃபைவ் ஸ்டார் செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 படங்கள் : எஸ்.பி.சுந்தர் 

Next Story

புகார் எதிரொலி; அரசு வாகனத்தில் அழைத்து வரப்பட்ட நாடோடி பழங்குடியினர்

Published on 01/06/2024 | Edited on 01/06/2024
garudan cuddalore theater tribal people issue

வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கருடன்’. இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று வெளியான இப்படம், நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. 

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாடோடிகள் பழங்குடியின பிரிவை சேர்ந்த மக்கள் சிலர் மாவட்டம் மாவட்டமாக பாத்திரம் விற்கும் வேலை செய்து வரும் நிலையில் வெயில் அதிகமாக இருக்கும் காரணத்தால் கடலூரில் உள்ள 'நியூ சினிமா' திரையரங்கில்  'கருடன்' திரைப்படத்தை பார்க்க சென்றுள்ளனர். ஆனால் காலை 8 மணி முதலே காத்திருந்த போதும் இறுதிவரை திரையரங்கில் டிக்கெட் தர மறுத்து விட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். எல்லோருக்கும் டிக்கெட் வழங்கப்பட்ட நிலையில் தங்களுக்கு ஏன் டிக்கெட் கொடுக்கப்படவில்லை என கேட்டதற்கு தியேட்டர் நிர்வாகம் சரியான பதில் கொடுக்கவில்லை எனத் தெரிவித்த அவர்கள் இது குறித்து காவல் நலையத்தில் புகார் கொடுத்தார்கள். அந்தப் புகாரில் தமிழகத்தில் பல இடங்களில் பல மாவட்டங்களில் உள்ள பல திரையரங்குகளில் சென்று திரைப்படம் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு மட்டும் எங்களுக்கு அனுமதி மறுத்துள்ளார்கள். இதற்கான காரணம் என்ன எனத் தெரிய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். 

இதையடுத்து அவர்களை கோட்டாட்சியரிடம் மனு அளிக்க காவலர்கள் அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் பலராமன் அந்த மக்களை அரசு வாகனத்தில் அழைத்துச் சென்று, படம் பார்க்க ஏற்பாடு செய்தார். பின்பு டிக்கெட் வாங்கி தற்போது அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு படம் பார்த்து ரசித்தனர். இதே போல் கடந்த ஆண்டு கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல பட வெளியீட்டின் போது, சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் சாலையோரம் பாசிமணி விற்கும் பெண்கள் சிலர் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் டிக்கெட் எடுத்து திரையரங்கம் உள்ளே சென்ற போது, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்தத் திரையரங்க உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவுசெய்து விசாரனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.