Advertisment

நடிகர் சூரியிடம் ரூபாய் 2.70 கோடி மோசடி!

Advertisment

actor soori adyar police station

Advertisment

நிலம் வாங்கித் தருவதாகக் கூறி நடிகர் சூரியிடம் ரூபாய் 2.70 கோடி மோசடி செய்ததாக இரண்டு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

'வீரதீர சூரன்' படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு ரூபாய் 40 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன். இந்த நிலையில், தயாரிப்பாளர், நடிகர் சூரிக்கு தர வேண்டிய சம்பள பாக்கியைத் தர மறுத்த நிலையில், நிலம் வாங்கித் தருவதாகக் கூறி சூரியிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, 'வீரதீர சூரன்' படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் குடவாலாஆகிய இருவர் மீது அடையாறு காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

actor soori adyar police station
இதையும் படியுங்கள்
Subscribe