Advertisment

நடிகை பிரியா பவானியுடன் காதலா? - கடுப்பான எஸ்.ஜே. சூர்யா...!

தமிழ் சினிமாவில் வாலி, குஷி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து, தன்னுடைய இயத்திற்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. பின்னர் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக நியூ, அன்பே ஆருயிரே, இசை, வியாபாரி, திருமகன் உள்ளிட படங்களில் அவர் நடித்திருந்தாலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கியத்தில் வெளியான 'இறைவி' படத்தில், அவர் நடிப்பு புதிய பரிணாமத்தைக் கண்டது. அது மட்டும் இல்லாமல் அந்த படத்தில், "ஆண் நெடில்... பெண் குடில்" என்ற வசனமும், எஸ்.ஜே.சூர்யாவின் எதார்த்தப் பேச்சும் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. இதற்கிடையில் மெர்சல், ஸ்பைடர் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரம் ஏற்று மிரட்டியிருந்தார்.

Advertisment

actor-sj-surya-twitter

இப்படி தமிழ் திரையுலகில் தனக்கான அங்கீகாரத்தை உருவாக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மான்ஸ்டர் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்தப் படம் அனைத்து விதமான ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டதையடுத்து, பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி ஜோடி மீண்டு இணைந்துள்ளது.

Advertisment

இதற்கிடையில் எஸ்.ஜே.சூர்யா ப்ரியாவிடம் தனது காதலை கூறியதாகவும் அதைப்ரியா நிராகரித்து விட்டதாகவும் சமூகவலைதளங்களில் செய்தி தீயாய் பரவியது. இதைப்பாரத்து கோபமடைந்த எஸ்.ஜே. சூர்யா, தனது டிவிட்டர் பக்கத்தில், "பிரியா பவானிசங்கரிடம் நான் காதலை வெளிப்படுத்தினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார் என்று சில முட்டாள்கள் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். மான்ஸ்டர் படத்தில் இருந்து அவர், எனக்கு நல்ல நண்பர். நல்ல நடிகையும் கூட. தயவு செய்து தவறான செய்திகளைப் பரப்பாதீர்கள். நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.

radha mohan priya bhavani shankar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe