“என் கஷ்டம் உனக்கு புரிதா இல்லையா,”... காதலுக்காக நாயிடம் கோரிக்கை வைக்கும் மொரட்டு சிங்கிள் சிம்பு!

valentines day actor simbu viral video

உலக காதலர்கள் தினத்தையொட்டி காதலர்கள் ரோஜா பூக்கள், பூங்கொத்துகள் உள்ளிட்டவைகளை ஒருவருக்கொருவர் வழங்கி தங்களது காதலைப் பரிமாறிக் கொண்டனர். அதேபோல், கடற்கரை, மால்கள், உணவகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களில் காதல் ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள காதல் ஜோடிகள் காதலர்கள் தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.

இந்த நிலையில், நடிகர் சிம்பு காதலுக்காக நாயிடம் கோரிக்கை வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் சிம்பு நாயிடம், "என் கோவத்தைப் பாரு. நீ பொண்ணு,இப்பதான் வளர்ந்து வந்துருக்க, இப்ப நீ ஒரு பையன மீட் பண்ணனும், அந்தப் பையனோட சில விஷயங்கள்லாம் நடக்கணும். அதுக்கு முதல எனக்குக் கல்யாணம் நடக்கணும், புரிதா. நான் மட்டும் தனியா இருக்கன்,நீ மட்டும் ஜாலியாக இருக்கனா,அது நியாயம் கிடையாது. அதனால நான் என்ன சொல்றனா,நீ நைட்டுலாம் உட்கார்ந்து 'மானிஃபஸ்ட்' பண்ணு. இந்த மாதிரி அவருக்குக் கல்யாணம் ஆகணும், அப்பதான் நம்ப வாழ்க்கையில ஜாலியா இருக்க முடியும்; இல்லனா முடியாது. அதுக்கப்புறம் என்ட்ட வந்து நீ கோவிச்சிக்கக் கூடாது. புரிஞ்சதா.

என் கஷ்டம் உனக்குப் புரிதா, இல்லையா, எதாவது சொல்லு. பரவால்ல, பரவால்ல, அந்தக் கடவுள் எனக்குக் கொடுப்பாரு; அது வரும்போது வரட்டும். நீ சந்தோசமா இரு. எதாவது சொல்லேன். என்ன சொல்லுது, ஆகிடும்னு சொல்றியா, ஆகிடுமா... ஓகே ஓகே. தாங்க்யூ, தாங்க்யூ" என்று நாயிடம் பேசினார்.

இந்த வீடியோவை நடிகர் சிம்பு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

silambarasan viral video
இதையும் படியுங்கள்
Subscribe