கோலிவுட்டில் சந்தானத்தை தொடர்ந்து நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் கலக்கி வருபவர் சதீஷ். சினிமாவில் அறிமுகமாகி பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் கூட நீண்ட நாட்களாக மணப்பெண் தேடி, கிடைக்காமல் வருத்தத்தில் இருந்து வந்தார்.

Advertisment

Actor sathiese

இதற்கிடையில் சதிஷூக்கு நடிகை கீர்த்தி சுரேஷூடன் திருணம் ஆகிவிட்டதாக சமூக வளைதளங்களில் வதந்திகள் கிளம்பின. அதுமட்டும் இல்லாமல் மேலும் சில நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார் சதீஷ்.

பின்னர் 'சிக்ஸர்' பட இயக்குநர் சாச்சியின் தங்கை சிந்துவும் சதிஷூம் காதலிப்பதாக செய்திகள் பரவின. 'சிக்ஸர்' படப்படிப்பு பணியின் போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.

Advertisment

இதை உறுதிபடுத்தும் விதமாக, அண்மையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் சதீஷூக்கும் சிந்துவுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதையடுத்து திருமண வேலையில் பிஸியான சதிஷ், திரைப்பிரபலங்களுக்கு தனது திருமண அழைப்பிதழை வழங்குவதில் மும்மரமாக செயல்பட்டுவந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆகியோரை நேரில் சந்தித்து, தனது திருமண அழைப்பிதழை சதிஷ் வழங்கியுள்ளார். இதை புகைபடத்துடன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.