தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி முடிவின் போது நடிகர் சரவணன் திடீரென்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Advertisment

big boss

இதன் பின்னணி என்னவென்று பார்த்த போது, திங்கட்கிழமையன்று ஒளிபரப்பான எபிஸோடின் முடிவில், பங்கேற்பாளர்களில் ஒருவரான சரவணன் திடீரென கன்ஃபெஷன் அறைக்கு அழைக்கப்பட்டார். அப்போது சேரனுக்கும், மீரா மிதுனுக்கும் இடையே இருந்த பிரச்னை குறித்து கமல் பேசும் போது, பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதற்காகவே சிலர் வருவது குறித்துப் பேசினார். அப்போது கையை உயர்த்திய நீங்கள், தானும் அப்படி நடந்திருப்பதாகக் கூறினீர்கள். அந்தத் தருணத்தில் மீரா - சேரன் பிரச்சனையால் இதைக் கவனிக்க முடியவில்லை. அதற்குப் பிறகு, ஜூலை 29ஆம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இதற்காக மன்னிப்பும் கோரினீர்கள். ஆனால், இந்த நிகழ்ச்சி கோடிக்கணக்கானவர்களால் பார்க்கப்படுகிறது.

பெண்களை தவறாக நடத்துவதை அனுமதிக்க முடியாது. அதனை கண்டிக்கிறோம். இதன் காரணமாக, நீங்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப் படுகிறீர்கள். உங்களுக்கு இடதுபுறம் இருக்கும் கதவைத் திறந்து வெளியேறுங்கள்" என்று சொல்லப்பட்டது. உடனடியாக சரவணன் ஏதும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினார். அத்துடன் திங்கட்கிழமை நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இதே போல் மற்றொரு பங்கேற்பாளரான இயக்குனர் சேரனையும் சரவணன் மிக மோசமாகப் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதனைப் பார்த்து வருந்திய பலர், இம்மாதிரி அவமானத்துடன் சேரன் நிகழ்ச்சியில் தொடர வேண்டுமா எனக் கேள்வியும் எழுப்பினர். இதற்கு பல இயக்குனர்களும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்படத்தக்கது.