style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன நடிகர்சரவணனுக்கு பன்றிக்காய்ச்சல் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
பருத்திவீரன், கடைக்குட்டி சிங்கம், கோலமாவு கோகிலாபோன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சரவணன்.
சேலத்தை சேர்ந்த இவர் கடந்த ஆறாம் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சேலம்எஸ்விஆர் ரவுண்டானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
ஆனால் அவருக்கு காய்ச்சல் குறையாததால் சென்னைக்கு புறப்பட்டார். சனிக்கிழமை காலை சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சரவணன் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகதகவல்கள் வந்துள்ளன.