actor sarathkumar, radhika sarathkumar meet sasikala

Advertisment

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73- வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் உள்ளிட்டோரும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், சசிகலாவை அவரது இல்லத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் சந்தித்துப் பேசினர்.அ.தி.மு.க. கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இருந்து வரும் நிலையில், சசிகலாவுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் சில அரசியல் கட்சித் தலைவர்களும் சசிகலாவை சந்திக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பைஇந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ள நிலையில், சசிகலா தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.