Skip to main content

''இது சட்டமன்றம் அல்ல...'' எஸ்ஏசி பேச்சு குறித்து சரத்குமார்! 

Published on 17/11/2019 | Edited on 17/11/2019

கமல் 60’ எனும் பிரம்மாண்டமான விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.  

 

sarathkumar in kamal 60

 

நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் எஸ்ஏ.சந்திரசேகரன் மேடையில் பேசும்பொழுது ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருவது என்பது உறுதி அதே நேரத்தில் இருவரும் அரசியலில் சாதிப்பதும் உறுதி. ஆனால் அப்படி சாதிப்பது என்றால் இருவரும் தனித்தனியே அரசியலுக்கு வருவதை விட இருவரும் ஒன்றாக சேர்ந்து அரசியல் செய்தால் கண்டிப்பாக தமிழகத்தில் நல்ல ஆட்சியை, அராஜகம் அற்ற ஆட்சியை தருவார்கள்.

அவர்களுக்கு பிறகு அரசியலில் அவரது தம்பிகளுக்கும் இருவரும் இடம்விட வேண்டும் என்றார். இதில் மறைமுகமாக விஜய்க்கு அரசியலில் வழிவிட வேண்டும் என்பதாக இருந்தது. இது அரங்கத்தில் குதூகலத்தையும் அதேபோல் ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அவரையடுத்து பேசுவதற்காக மேடைக்கு வந்த நடிகர் சரத்குமார் எஸ்ஏ.சந்திரசேகர் அரசியலில் ரஜினி, கமல் இணைவது குறித்து பேசியதற்கு தன்னால் பதிலளிக்க முடியும். ஆனால் இது சட்டமன்றமாக  இருந்திருந்தால் இதற்கு நான் பதில் அளித்திருப்பேன்.  இது கலை நிகழ்ச்சி சட்டமன்றம் அல்ல. இங்கு நான் ஒரு கலைஞனாக வந்திருக்கிறேன் அரசியல்வாதியாக வரவில்லை அரசியல்வாதியாக வந்திருந்தால் இதற்கு நான் பதில் அளித்திருப்பேன். இதற்கு நான் தனியே அவருக்கு பதில் சொல்வேன் என்றும் அவர் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாரத் மாதா கி ஜெ'- பாஜக மேடையில் முழங்கிய சரத்குமார்

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
'Family monarch rule is happening in Tamil Nadu' - Sarathkumar speech

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அல்லது நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரிக்கு பிரதமர் வந்துள்ளார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக விவேகானந்தர் கல்லூரிக்கு வந்த அவர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.இந்த கூட்டத்தில் அண்மையில் பாஜகவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பலரும்  கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய நடிகர் சரத்குமார், ''57 ஆண்டுகள் தமிழகத்தில் இந்த திராவிட கட்சிகள் ஆட்சி செய்தன. அது என்ன திராவிடம் என்று புரியவில்லை. நான் ஒரு சில அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தேன். திராவிடத்தை புரிந்து கொள்ளாமல் திராவிடம் திராவிடம் என்று சொல்லி ஒரு குடும்ப அரசியலும், மன்னர் ஆட்சியும் தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சாதாரண தொண்டன், ஏழை எளிய தொண்டன் நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும் என்று வருவதற்கு, ஒரு தலைவன் ஆவதற்கு, ஒரு பதவியில் அமர்வதற்கு வாய்ப்பு இல்லாத இடத்தில் கையை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

பிரதமரை பற்றி நான் நெல்லையில் நடந்த கூட்டத்திலேயே சொன்னேன். இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் இந்தியாவின் பெருமையை ஒரு தலைவன் எடுத்துச் சென்றிருக்கிறான் என்றால் அது பிரதமர் மோடி தான். அவருடைய வாழ்க்கை வரலாறு தெரியாதவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். ஒரு சிறந்த தலைவரை நாம் அடையாளம் காட்ட வேண்டும். ஒரு சிறந்த தலைவனுக்கு உழைப்பு இருக்க வேண்டும், உறுதி இருக்க வேண்டும், நியாயம் இருக்க வேண்டும், தர்மம் இருக்க வேண்டும், செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும்'' என்றார். தொடர்ந்து பேசிய அவர் பேச்சின் இறுதியில் ‘பாரத் மாதா கி ஜெ’ என மூன்று முறை முழங்கி தனது உரையை நிறைவு செய்தார்

Next Story

“குறைகளைக் கண்டறிவதை நிறுத்துங்கள்” - வரலட்சுமி சரத்குமார்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
varalkshmi sarathkumar explained about smk party joined bjp issue

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. திமுக, கூட்டணி, தொகுதிப்பங்கீட்டை முடித்து வேட்பாளர் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது. 

அந்த வகையில் சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அண்மையில் நடிகர் சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். பின்பு தனது கட்சியை, பாஜகவுடன் திடீரென்று இணைத்தார். அவரும் பா.ஜ.க.வில் இணைந்தார். சரத்குமாரின் இந்த முடிவு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதற்கு விளக்கமளித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “என்னை பொறுத்தவரை யாரையும் தரக்குறைவாக பேசியது இல்லை. மனைவியிடம் கருத்து கேட்டதினால் என்னை விமர்சனம் செய்கின்றனர். மனைவியிடம் கருத்து கேட்காமல் வேறு யாரிடம் கேட்பார்கள்?.  இது மாதிரியான கருத்துகளுக்கு நான் செவிசாய்க்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார். 

இதனிடையே, பா.ஜ.கவில் தனது கட்சியை சரத்குமார் இணைத்தது பின்னால் சரத்குமாரின் மகள் வரலட்சுமி இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த 2021 ஆம் ஆண்டு, என்.ஐ.ஏ சோதனையில் கேரளத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஆதிலிங்கம் என்ற நபர் வரலட்சுமியிடம் குறிப்பிட்ட காலம் உதவியாளராக பணியாற்றியிருந்தார். இது தொடர்பாக வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த வரலட்சுமி, சம்மன் வரவில்லை என்றும், ஆதிலிங்கம் பதவிக் காலத்துக்குப் பிறகு இன்றுவரை அவருடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியிருந்தார். இதன் காரணமாக வரலட்சுமி மீது போதைப் பொருள் கடத்தல் வழக்கு இருப்பதாகவும் இதில் தப்பிப்பதற்காக கட்சியை பா.ஜ.க-வில் இணைத்ததாகவும் செய்திகள் வெளியாகி வந்தது. 

இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் அந்த செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நமது ஊடகங்களில் பழைய போலிச்செய்திகளை பரப்புவதை விட எந்த செய்தியும் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. பிரபலங்களிடம் குறைகளை கண்டறிவதை நிறுத்துங்கள். நாங்கள் நடிக்கவும், மக்களை மகிழ்விக்கவும், எங்கள் வேலையைச் செய்யவும் முயற்சிக்கிறோம். அதே போல் உங்கள் வேலையை நீங்கள் ஏன் செய்யக்கூடாது. உண்மையிலேயே கவனிப்பதற்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது. எங்களது மௌனத்தை பலவீனத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவதூறு வழக்குகளும் இப்போது டிரெண்டிங்கில் உள்ளன. பொய்யான ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.