Actor Sarathbabu is worried

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சரத்பாபு. 71 வயதான இவர் தமிழ், தெலுங்கை தாண்டி கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த ‘முள்ளும் மலரும்’, 'அண்ணாமலை', 'முத்து' உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனிடையே தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

Advertisment

இவர் நடிப்பில் கடைசியாக நடிகர் சிம்ஹா ஹீரோவாக நடித்த 'வசந்தமுல்லை' படம் வெளியானது. கடந்த சில தினங்கள் முன் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. இதையடுத்து திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர் பூரண குணமடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

Advertisment

இந்நிலையில், சரத்பாபு கவலைக்கிடமான முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக்குறைவால் கடந்த 20 ஆம் தேதி கச்சிபுளி என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற உடல்உறுப்புகள் அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.