Advertisment

நடிகர் ரஜினி செய்தியாளர்கள் சந்திப்பு...!

Actor Rajnikanth press meet after meeting

நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன், சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்திதற்காக, போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் இருந்து நடிகர் ரஜினி புறப்படும்போது, அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் பட்டாசு வெடித்து, அவர் கார் மீது பூக்கள் வீசி கொண்டாடினர்.

Advertisment

அதேபோல் கூட்டம் நடக்குமிடமான ராகவேந்திரா மண்டபத்துக்குள் நுழைந்தபோது, அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisment

பின்பு கூட்டம் முடிந்து வீடு திரும்பிய ரஜினி அவரது போயஸ் தோட்ட வீட்டின் முன் இருந்த செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன். நான் எடுக்கும் முடிவுக்கு மாவட்டச் செயலாளர்கள் கட்டுப்படுவதாக உறுதியளித்துள்ளார்கள்” என்று தெரிவித்தார்.

politics rajnikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe