Advertisment

நடிகர் ரஜினியை ‘வா தலைவா வா’ என அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

Actor  Rajni political entry

சிதம்பரம் அருகே கீரப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் ரஜினி ரசிகர்கள் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் விதமாக ‘வா தலைவா வா’ என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதில் எங்களின் இறுதி நம்பிக்கை நீங்கள் மட்டும் தான், எங்களின் ஓட்டு உங்கள் ஒருவருக்கு மட்டுமே, ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு மட்டுமே என்ற வாசகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையறிந்த சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரசிகர்களும் இதேபோல் போஸ்டர் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக ரஜினி ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

Advertisment

மேலும் இதுகுறித்து கடலூர் மாவட்ட ரஜினி ரசிகர் நற்பனி மன்ற நிர்வாகி ரமேஷ்குமார் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இளைஞர்களின் எண்ணம் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான். அந்த நம்பிக்கையை இளைஞர்கள் கைவிடவில்லை. எனவே இனியும் தாமதிக்காமல் ரஜினி அரசியல் குறித்து அறிவிக்கவேண்டும் என்றார். அதே நேரத்தில் போஸ்டர் மூலம் ரசிகர்கள் எண்ணங்கள் வெளிபடுத்தப்பட்டு வரப்படுகிறது.

Advertisment

rajnikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe