Skip to main content

நடிகர் ரஜினிகாந்த் மகள் வீட்டில் நகைகள் கொள்ளை!

 

Actor Rajinikanth's daughter's jewels stolen from home!

 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் லாக்கரில் இருந்த நகைகளை காணவில்லை என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் செயிண்ட் மேரிஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டிலுள்ள லாக்கரில் இருந்த நகைகளைக் காணவில்லை என சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும், நகைகளை லாக்கரில் வைத்திருந்தது தனது வீட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தெரியும் என்றும் புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் பணிபுரியும் பணியாளர்களே நகைகளைத் திருடி இருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார். வைர நகைகள், தங்க நகைகள், நவரத்தினக் கல் என ரூ.3.6 லட்சம் மதிப்பிலான நகைகளைக் காணவில்லை என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !