Advertisment

ரஜினிக்கு வலது கை விரலில் அடையாள மை வைத்த சர்ச்சை - சத்யபிரதா சாகு விளக்கம்

மக்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார். அப்போது ரஜினியின் வலது கை விரலில் மை வைத்தனர். இது சர்ச்சைக்குள்ளானது.

Advertisment

r

இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம், நடிகர் ரஜினிகாந்தின் வலது கை விரலில் மை வைக்கப்பட்டுள்ளதே? என்று கேட்டதற்கு,

Advertisment

’’குறிப்பிட்ட விரலில் வைக்க வாய்ப்பு இல்லை என்றால் சில நேரங்களில் வேறு விரல்களில் வைக்கலாம். இது பொதுவானது தான்.

r

தேர்தல் பணியில் இருந்த ஊழியர்கள் தவறுதலாக வலது கைவிரலில் அடையாள மை வைத்திருக்கலாம். பணியில் இருந்த ஊழியர் செய்த தவறுக்கு அறிக்கை கேட்கப்படும்’’என்று தெரிவித்துள்ளார்.

Actor Rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe