Advertisment

முதலமைச்சருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி!

ads

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் நேற்று (12.12.2021) தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னை வந்த ரஜினி ரசிகர்கள், அவரது வீட்டின் முன்பு புகைப்படம் எடுத்தும், கேக் வெட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மேலும், அவரது பிறந்தநாளுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்திருந்தார்கள்.

Advertisment

இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அறிக்கை வாயிலாக தன்னுடைய நன்றியினை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்ட நடிகர் ரஜினிகாந்த், "என் பிறந்தநாளுக்கு நெஞ்சார வாழ்த்து தெரிவித்த என் நண்பரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா உள்ளிட்டோருக்கும் அவர் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

Advertisment

stalin rajini
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe