'மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி': ரஜினிகாந்த்!

actor rajinikanth tweet is thanks to union government and  pm narendra modi

இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 'தாதாசாகேப் பால்கே விருது' வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய திரைத்துறையின் மிக உயரிய விருதான 'தாதாசாகேப் பால்கே விருது' நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தனக்கு 'தாதாசாகேப் பால்கே விருது' அறிவித்த மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியத் திரையுலகின் மிக உயரிய 'தாதாசாகேப் பால்கே விருது' எனக்கு வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடி ஜிக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னில் இருந்த நடிப்புத் திறமையைக் கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஓட்டுநரான நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையில் வாடும்போதும் என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் சத்யநாராயணா ராவ் கெய்வாட்டுக்கும், என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் பாலசந்தருக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

actor rajinikanth tweet is thanks to union government and  pm narendra modi

என்னை மனமார்ந்து வாழ்த்திய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் நண்பர் மு.க.ஸ்டாலின், நண்பர் கமல்ஹாசன், மத்திய, மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Actor Rajinikanth PM NARENDRA MODI Tweets union government
இதையும் படியுங்கள்
Subscribe