தமிழ்ப் புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Advertisment

actor rajinikanth tamil newyear tweet

அதன் தொடர்ச்சியாகநடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தப் புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும்; இந்தத் துயரமான நேரத்தில் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்குச் சேவை செய்துக்கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளைத் தவறாமல் கடைப்பிடித்துப் பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து போகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.