/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajini makkal mandram.jpg)
கரோனா தடுப்பூசி வரும்வரைநடிகர் ரஜினிகாந்த்அரசியல் கட்சித் தொடங்கப்போவதில்லை என சமீபத்தில் அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில் உடல்நிலை காரணமாக சுற்றுப் பயணங்களை தவிர்க்கவும், மக்களைச் சந்தித்து அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும் ரஜினியை மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், 'எனது பெயரில் சமூக ஊடகங்களில் பரவுவது என் அறிக்கை அல்ல; ஆனால் எனது உடல்நிலை குறித்து வெளியான தகவல் உண்மையே' என்று விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது; "என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் 'ரஜினி மக்கள் மன்ற' நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்". இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow Us