actor rajinikanth ready for video conference -  Rajini lawyer Ilam Bharathi

2018ஆம் ஆண்டு மே 22 அன்று தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு மாவட்டக் கலெக்டரிடம் மனுக்களைக் கொடுக்கப் பேரணியாக சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 13 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து உடல் உறுப்புகளை இழந்தனர். அந்த சமயம் பாதிக்கப்பட்டவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமயைில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

Advertisment

அப்போது, பேரணியில் நடந்தவைகளைப் பற்றி ரஜினிகாந்த், தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக் கமிஷன், ரஜினியை நேரில் ஆணையத்தில் ஆஜராகும்படி கடந்த வருடம் அவருக்குசம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அதற்கு ரஜினியின் வழக்கறிஞரான இளம் பாரதி ஆஐராகி ரஜினி சார்பாக அஃபிடவிட் தாக்கல் செய்தார். தொடர்ந்து ஜனவரி 19ஆம் தேதி அன்று ஆஜராகும்படி ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

Advertisment

அது தொடர்பாக, ரஜினியின் வழக்கறிஞர் இளம் பாரதி நேற்று(19.01.2021) ஆணையத்தில் ஆஜராகி ரஜினி சார்பில் மனுதாக்கல் செய்தார். பின்பு அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “தற்போது கரோனா தொற்று காலம் என்பதால் வழக்கமாக நடக்கிற காணொளிக்காட்சி மூலம் விசாரணை செய்யப்பட்டால் பதில் சொல்வதாக ரஜினி தெரிவித்தார்.

ஏற்கனவே, ஆணையம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் தெரிவித்தாகிவிட்டது. மீண்டும் கேள்வி கேட்டால் பதில் சொல்வதாகவும் தெரிவித்துள்ளார். காணொளிக்காட்சி வசதி இல்லை எனவே மனுவைப் பரிசீலித்து உத்தரவு பிறப்பிப்பதாகச் சொன்ன நீதிபதி, சென்னையில் கூட நேரடி விசாரணையில் ஆஜராகலாம் என்று தெரிவித்திருக்கிறார்” என்றார்.