சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு எனக்கு இன்னும் சம்மன் வரவில்லை. சம்மன் வந்தால் ஆஜராகி விளக்கம் அளிப்பேன். என்பிஆர் அவசியம், தேவை, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிய வரும். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்.

actor rajinikanth press meet in chennai

Advertisment

சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி பரப்பப்படுகிறது. அரசியல்வாதிகள் தங்களது சுய லாபத்துக்காக தூண்டிவிடுகின்றனர். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் முதல் ஆளாக நான் எதிர்ப்பேன். மாணவர்கள் எதையும் ஆராயாமல் போராட்டம் செய்தால் அரசியல்வாதிகள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. என்சிஆர் இன்னும் அமல்படுத்தப்படவில்லை; அதுகுறித்து ஆலோசித்துதான் வருகின்றனர். நான் நேர்மையாக வரி செலுத்துகிறேன்; எந்த சட்ட விரோத தொழிலும் செய்யவில்லை." இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.