உலக தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி நேற்று (11.01.2020) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்றார்.
அதைத் தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை விக்னேஸ்வரன் சந்தித்து பேசினார். அப்போது இலங்கை சுற்றுப்பயணம் செய்ய வருமாறு நடிகர் ரஜினிகாந்திற்கு விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்தார்.