நாளை மீண்டும் ரஜினி மக்கள் மன்றநிர்வாகிகளை நடிகர்ரஜினிகாந்த் சந்திக்க இருக்கிறார்.

Advertisment

கடந்த 5 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 37 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

 Actor Rajinikanth to meet executives again tomorrow

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஆலோசனை கூட்டத்திற்கு பின் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "கட்சித்தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பின் மாவட்டச் செயலாளர்களை சந்தித்து பேசினேன். மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை; ஏமாற்றமே. திருப்தியில்லாத, ஏமாற்றமடைந்த விஷயம் என்னவென்று பின்னர் கூறுகிறேன் எனக்கூறியிருந்தார்.

தான் கட்சி ஆரம்பித்தால் நான் முதல்வர் வேட்பாளர் இல்லை உங்களில்ஒருவர்தான்முதல்வர் வேட்பாளர் எனநிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் வெளிப்படுத்தியதாகவும்,அதற்குநிர்வாகிகள் மறுப்பு தெரிவித்ததாகவும்.இதைத்தான்ரஜினிகாந்த் ஏமாற்றம் எனச் செய்தியாளர்களிடம் குறிப்பட்டதாவும் தகவல்கள்வெளியான நிலையில் மீண்டும் நாளை ரஜினி மக்கள் மன்றநிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது .