/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a961_1.jpg)
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
அவர் சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைக்கு பிறகு சில தினங்களில் அவர் டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. பின்பு தமிழக சுகாதாரத்துறை, ரஜினி உடல்நிலை குறித்து அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை எனவும், பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ரஜினி பூரண குணமடைய வேண்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் பிரார்த்தனை செய்து வருவதாக எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்த அறிகையில் “ரஜினிகாந்த் 30 செப்டம்பர் 2024 அன்று கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் இருந்து பிரியும் இரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இருதயநோய் நிபுணர் டாக்டர். சாய் சதீஷ் பெருநாடியில் ஒரு ஸ்டென்டை வைத்து வீக்கத்தை முழுவதுமாக நீக்கினார். அதனால் அறுவை சிகிச்சை இல்லாமல் அதை சரி செய்துவிட்டோம். திட்டமிட்டபடி சிகிச்சை நிறைவு பெற்றது. இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்பவுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிச்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)