ACTOR RAJINIKANTH BIRTHDAY WISHES TAMILNADU CM AND OPPOSITION PARTY LEADER

Advertisment

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி, அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தின் 70- வது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்துக்கு சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ACTOR RAJINIKANTH BIRTHDAY WISHES TAMILNADU CM AND OPPOSITION PARTY LEADER

Advertisment

அதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்துக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 71 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்! நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன்!" என குறிப்பிட்டுள்ளார்.