Published on 12/12/2020 | Edited on 12/12/2020

நடிகர் ரஜினிகாந்தின் 70- வது பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்துக்கு சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடியும் நடிகர் ரஜினிகாந்துக்கு ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அன்பான ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆரோக்கியமான வாழ்வை ரஜினிகாந்த் பெற வேண்டும்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லம் முன் ரசிகர்கள் வர தொடங்கியுள்ளனர்.