நடிகர் ரஜினிகாந்த் சென்னையிலிருந்து ஆன்மீகப் பயணமாக திடீரென இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். நவம்பர் மாத இறுதியில் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அக்டோபர் மாத மத்தியிலேயே ரஜினி இமயமலைக்கு பயணம்.

Advertisment

தர்பார் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். பின்பு அங்கிருந்து விமானம் மூலம் டோராடூன் செல்கிறார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் சில மணி நேரம் ஓய்வு எடுத்த பின்னர் சாலை மார்க்கமாக ரிஷிகேஷ் மற்றும் பாபா குகை கோயிலுக்கு செல்கிறார். அமர்நாத், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது. எனவே அங்கு செல்லமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ACTOR RAJINIKANTH ARRIVE AT UTTARAKHAND  STATE

2010- க்கு முன்பு வரை ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பும் முடிந்ததும் ரஜினி இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். எட்டு ஆண்டு இடைவெளிக்கு பின்னர், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஆன்மீக பயணம் சுமார் 10 நாட்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு மீண்டும் தமிழகம் திரும்பும் ரஜினி தர்பார் பட டப்பிங்கில் பங்கேற்கிறார்.