''ரஜினிகாந்த் நலமாக உள்ளார்''- லதா ரஜினிகாந்த் தகவல்

Actor Rajinikanth admitted to hospital

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி டெல்லியில் தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது. இதற்காக டெல்லி பயணம், விழாவில் பங்கேற்றது, பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றது, தொடர்ந்து நண்பர்கள் சந்திப்பு, வாழ்த்து பெற்றது என இருந்தார். டெல்லி பயணம், தலைவர்கள், நண்பர்கள் சந்திப்பு என இருந்தநிலையில் சென்னை திரும்பினார்.

rajini

இந்தநிலையில் வியாழக்கிழமை காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இது குறித்து விளக்கமளித்துள்ள ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ''ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்திற்கான முழு உடல் பரிசோதனைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பயணம், விழாக்களில் பங்கேற்பு, தலைவர்கள், நண்பர்கள் சந்திப்பு என இருந்ததால்இரவு ஓய்வு எடுத்துவிட்டு நாளை காலை ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

hospital rajinikanth
இதையும் படியுங்கள்
Subscribe