Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

அண்மையில்ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் அக்.10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' என்ற படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்நிலையில் சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் திட்டமிட்டப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காக அவர்அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரத்த நாளத்தில் அடைப்பு இருக்கிறதா என்பது குறித்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பரிசோதனைக்கு பின்னர் இன்றே அவர் டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

திட்டமிட்டப்பட்ட மருத்துவ பரிசோதனை என்பதால் எந்தவித பாதிப்புகளும் இல்லை, இருப்பினும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இது குறித்து விவரங்கள் அறிக்கையாக வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.