actor rajini kanth chennai corporation paying tax

Advertisment

சென்னை ராகவேந்திரா மண்டபத்திற்கு மாநகராட்சி விதித்த சொத்து வரியை நடிகர் ரஜினிகாந்த் செலுத்தினார். சொத்து வரி, மாநகராட்சி அலுவலகத்தில் ரஜினி சார்பில் காசோலையாக செலுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சி சொத்து வரி விதித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் நடிகர் ரஜினிகாந்த். உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, நீதிபதியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து வாபஸ் பெற்றார்.

இதனிடையே, சொத்து வரி விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம்' என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.