"தலைவன் போல் நின்றுகொண்டிருந்தார் ரஜினி"...பிரபல கிரிக்கெட் வீரர் அதிரடி!

அரசியலுக்கு நடிகர் ரஜினிகாந்த் வருவேன் என்று சொன்ன நாளில் இருந்து தினந்தோறும் அவரை பற்றிய செய்திகள் வெளிவந்து பரபரப்பாகிறது. சில நாட்களுக்கு முன்பு அடுத்த முதல்வர் ரஜினி தான் என்று கராத்தே தியாகராஜனும், நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்து இருந்தார். தற்போது தர்பார் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. அப்போது மும்பையில் ஒரு தனியார் ஹோட்டலில் ரஜினி தங்கியுள்ளார். இந்த நிலையில் தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் தனது அறைக்கு செல்ல லிஃப்ட்டில் சென்றிருக்கிறார் ரஜினி. அப்போது இந்திய கிரிக்கெட் அணி வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான ஹேமங் பதானி ரஜினியைச் சந்தித்துள்ளார்.

rajini

இதனையடுத்து ரஜினியை சந்தித்தது குறித்து ஹேமங் பதானி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில், "இந்த ரசிகன் தருணம் சிறிது நேரத்துக்கு முன்னால் நடந்தது. நான் எனது அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது லிஃப்ட் கதவு திறக்கும்போது ஆச்சரியப்பட்டேன். லிஃப்ட்டுக்குள் தலைவன் போல நின்று கொண்டிருந்தார் ரஜினி. அவர் எவ்வளவு எளிமையானவர், அடக்கமானவர் என்பதை மற்றவர் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது நானே நேரடியாகப் பார்த்தேன். ரஜினியின் 'ஒளி'யை கண்டிப்பாக உணர்ந்தேன். அவரிடம் ஏதோ ஒரு விசேஷம் உள்ளது. ரத்த ஓட்டம் அதிகமானது. தலைவர் ரஜினிகாந்த்துடன் இருந்த இரண்டு நிமிடங்கள் என் வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்த்து மகிழ்வேன்” என்று ஹேமங் பதானி தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

indian cricket PLAYER politics rajinikanth
இதையும் படியுங்கள்
Subscribe