Raghava Lawrence

Advertisment

நடிகர் ரஜினிகாந்த் தான் முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டுமெனநடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

சமூகவலைதளத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்ஒருவருக்கு பதிலளித்துள்ளராகவா லாரன்ஸ்,லீலா பேலஸில், அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக ரஜினிகாந்த் அறிவித்த பொழுது ஒரு ரசிகனாக மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அதே நேரம் தான் முதலமைச்சராக இருக்க போவதில்லை என அவர் கூறியதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் ரசிகன் என்ற முறையில் அவரது வார்த்தைக்கு மரியாதை கொடுத்து அவருடைய முடிவிற்கு சம்மதம் தெரிவித்தேன். ஆனால் மனப்பூர்வமாக அவர் சொன்ன அந்த கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை எனதெரிவித்துள்ள ராகவா லாரன்ஸ்,நடிகர் ரஜினிகாந்த் தான் முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டும். ''நீங்க வந்தா நாங்க வர்றோம்;இப்போ இல்லன்னா வேற எப்போ'' என்ற ஹேஷ் டாக்கை பயன்படுத்தி உருக்கமாகஇந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலில் சேவையாற்ற தயாராக இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.