லிப்ட்டில் மாட்டிக்கொண்ட நடிகர் புகழ்! பரபரப்பான நிமிடங்கள்! 

Actor Puazh trapped in the lift! Exciting minutes!

திருச்சி, தென்னுார் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஓட்டல் ஒன்றின் திறப்பு விழாவிற்கு குக் வித் கோமாளிநடிகர் புகழ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த ஹோட்டல் 3வது மாடியில் அமைந்திருந்ததால் ஹோட்டலை திறந்து வைத்த நடிகர் புகழ், அதே கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்த ஜுவல்லரி கடையை பார்வையிட லிப்ட் மூலம் கீழே வந்துள்ளார்.

புகழுடன் ஓரிருவர் மட்டுமே லிப்டில் செல்ல, போட்டோகிராபர்கள், பவுன்சர்கள் உள்ளிட்ட பலர் மாடி படி வழியாக தரை தளத்தில் உள்ள ஜுவல்லரிக்கு விரைந்து சென்று காத்திருந்தனர். சுமார் 10 நிமிடத்திற்கும் மேலாகியும் லிப்ட் வராததால் கீழே காத்திருந்தவர்கள் பதட்டம் அடைந்தனர்.

இந்நிலையில் 10 நிமிட பதட்டத்திற்கு பிறகு லிஃப்ட் கீழே வந்திறங்கிய போது அதிலிருந்து வேர்க்க விறுவிறுக்க புகழ் வெளியில் வந்தார். 10 நிமிடத்திற்கும் மேலாக லிப்ட் வேலை செய்யதால் பாதி வழியிலேயே நின்று போனதால் அந்த ஹோட்டல் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. மூன்றாம் தளத்திலிருந்து கீழே தரை தளத்திற்கு வந்தபோது லிப்ட் பாதியிலே நின்று பிறகு மீண்டும் அதுவாக சரியாகி கிழே இறங்கியுள்ளது.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe