Actor Prabhu was admitted to a hospital

நடிகர் பிரபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

தமிழ் திரையுலகில்100க்கும் அதிகமான படங்களில் நடித்து 80, 90களில்முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த பிரபுதமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில், நடிகர் பிரபு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் பிரபல திரைப்பட நடிகர் பிரபு பிப்ரவரி 20 ஆம் தேதி இரவு சிறுநீரகக் கற்கள்பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் அந்த கற்கள் அகற்றப்பட்டன. தற்போது அவர் பூரண உடல்நலத்துடன் இருக்கிறார்’ என அறிவித்துள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பொதுவான மருத்துவப் பரிசோதனைகள் முடிவடைந்த பின் ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் எனவும்அந்த மருத்துவமனைகுழுவின் தலைவர் பழனியப்பன் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.