Advertisment

நடிகர் நிதிஷ் வீரா உடலை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்.. 

Actor Nitish Veera's family cries after seeing his body ..

Advertisment

கரோனா இரண்டாம் அலையால் திரைத்துறையினர் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக பல்வேறு கலைஞர்களையும் நாம் இழந்துவருகிறோம். இந்நிலையில், ‘புதுப்பேட்டை’, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘காலா’,‘அசுரன்’ போன்ற திரைப்படங்களில் முக்கியப் பாத்திரத்தில் நடித்த நிதிஷ் வீரா, கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாக கரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றுவந்த இவர், நேற்று (17.05.2021) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை கோசாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நடிகர் ரிதிஷ் வீரா. இவர் சென்னையில் தங்கி சினிமா பணிகளை செய்துவந்தார். இந்நிலையில், கரோனா தொற்று பாதித்து சென்னையிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நிதிஷ் வீராவின் உடலை அவரது குடும்பத்தினர், மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, அமரர் ஊர்தி வாகனத்தில் அவரது உடல் சென்னையில் இருந்து மதுரை கோசாகுளம் பகுதியில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது அவரது மகள்களும் மனைவியும் அவரது உடலைப் பார்த்து கதறி அழுதது பார்ப்போரை கலங்கச் செய்தது.

Advertisment

பிறகு அருகிலுள்ள பட்டிமேடு மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. நடிகர் நிதிஷ் வீராவுக்கும், மதுரை ராம்நாடு பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கும் திருமணமாகி ஆறு வயதில் ஒரு பெண்ணும் 3 வயதில் ஒரு பெண்ணும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

madurai corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe