Advertisment

முதலில் உசுப்பியதே பாண்டவர் அணிதான்- நாசர் பேட்டி!

நடைபெற்று வரும் நடிகர் சங்க தேர்தலில் வாக்குப்பதிவுக்குப் பிறகு பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர் செய்தியாளர்களைச் சந்தித்தார்,

Advertisment

மூன்றாண்டுகளுக்கு முன்பு 2016ல் இதே இடத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடந்தது. இப்பொழுது நாங்கள் பாண்டவர் அணியினர் என தைரியமாக சொல்லிக்கொள்ளலாம். தேர்தல் முடிந்த பிறகு பாண்டவர் அணி எனும் அடையாளத்தை வைத்துக் கொள்வதில் பெருமை.

Advertisment

actor nasser interview!

எல்லாருக்கும் பொதுவான ஒரு வேலையை தான் நாங்கள் செய்துகொண்டு வந்தோம். முதலில் இந்த எலக்சன் நடக்க வேண்டும் என்று கொண்டுவந்ததே பாண்டவர் அணி தான். இவ்வளவு பெரிய சங்கத்தில் ஒரு 3000 பேர் இருக்கின்ற இந்த சங்கத்தில் எத்தனை முறை தேர்தல் நடைபெற்றது என்று நிறைய பேருக்கு தெரியாது. எல்லோருக்கும் அந்த உரிமை இருக்கிறது. எல்லோருக்கும் இந்த கடமை இருக்கிறது என்று உசுப்பிவிட்டது பாண்டவர் அணி தான். சட்டப்படி மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடக்க வேண்டிய என்ற பெயரில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

ஆறு மாதம் கடந்ததற்கான காரணங்கள் எல்லாம் சொல்லியாச்சு. மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பாண்டவர் அணி செய்த வேலைகளை வைத்து கட்டிடங்கள் எல்லாம் கட்டிக் கொண்டிருக்கிற வேலைகள், உறுப்பினர்களுக்கு பல விஷயங்கள் செய்தது இதெல்லாம் பாண்டவர் அணிக்கு ஆதரவாக இருக்கும் என்று நினைக்கிறேன். மறுபடியும் திரும்பி வருவேன்.நாள் முழுக்க இங்கே தான் இருப்பேன். இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன் என்றார்.

elections Nassar tamilcinema
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe