Advertisment

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மயில்சாமியின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர் பார்த்திபன், நடிகர் நாசர், ஜெயராம், நகைச்சுவை நடிகர் செந்தில் என பலரும் மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மயில்சாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மயில்சாமியின் மறைவு குறித்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அண்ணன் மயில்சாமி அவர்கள் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. சிறந்த குணச்சித்திர நடிகர், எளிய மனிதர்கள் மீது பேரன்பு கொண்டவர்,ரசிகர்களின் அன்பைப் பெற்ற அண்ணன் அவர்கள் என்றென்றும் நினைவுகூறப்படுவார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.