/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1002_0.jpg)
பிரபல நடிகர் மயில்சாமி திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த மயில்சாமி 1984ல் இயக்குநர் மற்றும் நடிகருமான பாக்யராஜின் தாவணிகனவுகள் திரைப்படத்தின் மூலம் திரை உலகுக்குள் நுழைந்தார். அதுமுதல் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். உச்ச நட்சத்திரங்கள் பலருடனும் இணைந்து மயில்சாமி நடித்துள்ளார்.
சினிமாவை தாண்டி பொதுநலம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். கொரோனா காலங்களில் மக்களுக்கு ஏகப்பட்ட உதவிகளைச் செய்து சினிமாவையும் தாண்டி பொதுவெளியில் நன்கு அறியப்பட்டவர். மேலும் 2021 சட்டமன்றத்தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகவும்போட்டியிட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மயில்சாமி சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவால் தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மயில்சாமியின் இறப்பு சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும்ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)