Advertisment

ஊரடங்கு நெருக்கடியில்  ரியல் ஹீரோ! 

ஊரடங்கு காலத்தில் கடந்த 55 நாட்களாக கோடிக்காணக்கான ஏழை எளிய மக்களின் வாழ்நிலை கேள்விக் குறியாகியிருக்கிறது. இவர்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவைகள்தான் நிவாரண பொருட்களை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன.

Advertisment

அதேசமயம், தமிழக முழுவதும் திருநங்கைகள் பலருக்கும் அத்தியாவசியபொருட்கள் கிடைக்கவில்லை. இதனால் பசி பட்டினியில் திருநங்கைகள் கஷ்டப்படுவது குறித்த தகவல்கள் வெளிவந்தன. ஆனால், அவர்களுக்கு முழுமையான உதவிகள் கிடைக்கவில்லை.

Advertisment

mmmm

இதனையறிந்து, 1000 திருநங்கைகளுக்கு அத்தியாவசியபொருட்கள் வழங்கி அவர்களை மகிழ்வித்திருக்கிறார் தமிழகத்தின் இளம் நடிகர் ‘மெட்ரோ’ சிரிஷ். மெட்ரோ மற்றும் ராஜாரங்குஷ்கி படங்களின் ஹீரோ இவர். கலைநாயகன் என தமிழ்த்திரை உலகில் வர்ணிக்கப்படும் நடிகர் மெட்ரோ சிரிஷ், பெருங்களத்தூரில் உள்ள தமிழ்நாடு திருநங்கைகள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருக்கும் 45 திருநங்கைகளுக்குஅரிசி, பருப்பு, எண்ணெய், தானிய வகைகள், சமையல் பொருட்கள், காய்கறிகள் என அத்தியாவசியபொருட்களை வழங்கியிருக்கிறார்.

இது தவிர, தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 1000 திருநங்கைகளுக்கு தன்னால் முடிந்த நிவாரண உதவிகளை செய்திருக்கிறார் மெட்ரோ சிரிஷ். அவரிடம் நாம் பேசிய போது, ‘’ வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழைகளுக்கு நிவாரண உதவிகள் இயல்பாகவே கிடைத்து விடும். ஆனால், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வரும் திருநங்கைகளுக்கு நெருக்கடியான காலக்கட்டங்களில் எந்த உதவிகளும் கிடைப்பதில்லை. அவர்களை பற்றி நினைக்கவே பலரும் யோசிப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வதுதான் முழுமையான நிவாரணம்.அந்த வகையில் திருநங்கைகளுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் எனக்கு விருப்பம் இருந்தது. அதனால் என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன் ‘’ என்கிறார் மிக தன்னடக்கமாக !

இந்த ஊரடங்கில் ரியல் ஹீரோவாக உயர்ந்து தெரியும் மெட்ரோ சிரிஷின் தொண்டுள்ளம் அறிந்து, திரைத்துறையினரும் சமூக நல அமைப்பினரும் பாராட்டி வருகின்றனர்!

actor corona help
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe