Advertisment

கரோனா குறித்து சர்ச்சை பேச்சு - நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்!

பரக

Advertisment

நடிகர் விவேக் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் (17.04.2021) உயிரிழந்தார். கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதுதான் விவேக் மரணத்துக்கு காரணம் என்று சிலர் சந்தேகம் எழுப்ப, அவர் மரணத்திற்கு கரோனா தடுப்பூசி காரணம் இல்லை என்று மருத்துவர்கள் விளக்கியிருந்தார்கள். இந்நிலையில், விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட இருப்பதாக நேற்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள மன்சூர் அலிகான், தான் தடுப்பூசி பற்றி தவறாக பேசவில்லை என்றும், யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம் என்றுதான் கூறினேன்என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

coronavirus vaccine Mansoor Ali Khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe